பேரையூரில் குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்பினர்களுடன் பல்வேறு சமூக அமைப்பினர்கள் இணைந்து ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்ட திருத்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்கட்சியினர் கடும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்,இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் பேரையூர் சார் கருவூல அலுவலகம் அருகே பேரையூர், தும்மநாயக்கன்பட்டி, எழுமலை, உசிலம்பட்டியின் கீழப்பள்ளி வாசல், மேலப்பள்ளி வாசல்களை சேர்ந்த முஸ்லிம் ஜமாத் அத்தார்கள் என சுமார் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி, திமுக, எழுத்தாளர் சங்கம் என பல்வேறு சமூக அமைப்பின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒற்றுமையாய் அனைத்து சமூதாய மக்களும் வாழ்ந்து வரும் சூழலில் பிரிவினை வாதத்தை உருவாக்கும் நோக்கில் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், ஒற்றுமையை சீர்குலைக்கும் இந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் என கோசங்கள் எழுப்பினர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!