உசிலம்பட்டி அருகே கிறிஸ்துமஸ் நாளில் மதங்கள் மாறினாலும் மனிதநேயம் மாறாத நிகழ்வு.

பொதுவாக ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மத பண்டிகையின் போது தங்கள் இனத்தாருடன் சேர்ந்து கொண்டாடுவர்.சிலர் தங்கள் பக்கத்து வீட்டுக்காரரையும் இணைத்து கொண்டாடுவர்.ஆனால் தன்னுடைய மதபண்டிகையின் போது இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு வீடுகட்டிக் கொடுத்து அவர்களுடன் கிறிஸ்;துமஸ் கொண்டாடிய நெகிழ்ச்சியான சம்பவம் உசிலம்பட்டி அருகே நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ளது குறிஞ்சி நகர். இந்த குறிஞ்சி நகரில் மலைவாழ் இனத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. புhராமரிப்பில்லாததால் இந்த பகுதியில் உள்ள சில வீடுகள் இடிந்து தரைமட்டாகி கிடந்தன. இதனால் மலைவாழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்..

இதனையறிந்த உசிலம்பட்டி தனியார் சேவை அமைப்பான தேவ அக்கினி சபையைச் சேர்ந்த நிறுவனர் கருனாகரன் தலைமையில் அமைப்பினர் மலைவாழ் மக்கள் சுமார் 5பேருக்கு தங்களது சொந்த செலவில் விPடுகட்டி தந்துள்ளனர்.இந்த 5 பேரில் ஒருவர் இந்து கோவில் பூசாரி ஆவார்.மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையன்று இவ்வீட்டில் கிரகப்பிரவேசம் செய்து மலை வாழ் மக்களுடன் அசைவவிருந்து சமைத்து சாப்பிட்டு கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.இந்நிகழ்ச்சியில் தேவஅக்கினி சபையைச் சோ்ந்த ஜெபாஸ்டின் வில்சன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

இந்த கிறிஸ்துமஸ் நல் நாளில் கிறிஸ்துவர்கள் மட்டுமே அடைக்கலம் என்றில்லாமல் மனிதன் அனைவரும் ஒன்றே என்பதற்கும் மதங்கள் மாறினாலும் மனிநேயம் இன்னும் மாறவி;ல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்நிகழ்வு அமைந்துள்ளது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!