ஆசியாவின் இரண்டாவது மிக நீளமான நீர் செல்லும் தொட்டிபாலமான 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வைகை நீர் வந்தடைந்தது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்க விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வைகை அணையிலிருந்து கடந்த 5ஆம் தேதி 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.இந்த நீர் ஆண்டிபட்டி அருகே டி.புதூர் எனும் இடத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நீரின் அளவு 50 அடியாக குறைக்கப்பட்ட சூழலால் தண்ணீர் வர தாமதமானது.இந்நிலையில் இன்று வைகையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவை அதிகரித்து சுமார் 110 கன அடியாக நீர் திறக்கப்பட்டது அதன்படிஇன்று ஆசியாவின் நீர் செல்லும் இரண்டாவது மிக நீளமான தொட்டிபாலமான 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வைகை நீர் வந்தடைந்தது.இன்று மாலைக்குள் உசிலம்பட்டி பகுதிக்கு வந்தடைந்து கண்மாய்களுக்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் அனைத்து கண்மாய்களுக்கும் நீரை நிரப்ப வேண்டும், தனி அதிகாரியை நியமித்து ஆசியாவின் அதிசயத்தை பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!