எய்ட்ஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி

உசிலம் பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ்மற்றும் உசிலை நகர அரிமா சங்கம் சார்பாக  எய்ட்ஸ் விழிப்புணர்வுப் பேரணி மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பேரணி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பேரணி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை  ரேச்சல் துவக்கி வைத்தார். பேரணி பேரையூர் ரோடு தேவர் சிலை அருகில் பேருந்து நிலையம் வழியாக சென்று டி இ எல்சி பள்ளியில் நிறைவாக முடிந்தது ..

நிறைவு விழாவில் அரிமா கவர்னர்  அறிவழகன்  செயலர்  பத்மநாதன்  பொருளாளர்  டாக்டர் ரவீந்திரன் மற்றும் டில்சி பள்ளி தலைமை ஆசிரியை ஆகியோா்    ஜூனியர்க ளுக்கு வாழ்த்துக்கள் நன்றிகள் கூறி டெங்கு காய்ச்சல் பற்றின விழிப்புணர்வுகளை வழங்கினார்கள்.நிறைவில் ஜூனியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது ..இப்பேரணியை உசிலம்பட்டி கல்வி மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் ஒலிவா சாந்த சீலி இணை கன்வீனர் பிரதீப் குமார்  ஏற்பாடு செய்திருந்தனர்.பேரணியில் சுமார் 250 க்கும் மேற்பட்ட ஜே. ஆர். சி .ஜூனியர்கள் கலந்து கொண்டனர்.பேரணி சென்று கொண்டிருக்கும்பொழுது உசிலம்பட்டி ஆர்.டி.ஓ செளந்தா்யா வாழ்த்துக்கள் வழங்கினார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!