உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியில் பிறந்த 16 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து புதைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குஞ்சாம்பட்டியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன்(30). ஆட்டோ டிரைவராக பணி புரிந்து வருகிறார்.இவருடைய மனைவி ஜெயப்ரியா(28). இவர்களுக்கு ஏற்கனவே 4 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த 16 நாட்களுக்கு முன்பு இரண்டாவதாக பெண் குழந்தை தொட்டப்பநாயக்கணூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தது. இக்குழந்தை கடந்த 5 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) குழந்தை உடல்நல குறைவால் இறந்துவிட்டதாகவும், யாருக்கும் தெரியாமல் சடலத்தை வீட்டின் அருகே புதைத்து விட்டதாகவும் தெரிகிறது. இதனையடுத்து இப்பகுதி கிராம நிர்வாக அலுவலர்
மணிகண்டன் கோட்டாச்சியருக்கு தகவல் கொடுத்தார்.உசிலம்பட்டி கோட்டாச்சியர் சௌந்தர்யா உத்தரவின் படி இந்த இறப்பு இயற்கை மரணமா, அல்லது பெண் சிசு கொலையா என மருத்துவ குழுவினர் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர் தேவிப்பிரியா தலைமையில் மருத்துவர் குழு மற்றும் போலிசார் சம்பவ இடத்திற்குச் சென்று பெண் சிசு உடலை தோண்டி எடுத்து சம்பவஇடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.பரிசோதனை முடிவுக்குப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









