மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திருமங்கலம் விலக்கில் பலத்த காற்று வீசியதால் பழமையான மரம் சாய்ந்து மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் விழுந்தது. உடனே தகவலறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சாலையில் விழுந்து கிடந்த மரக்கிளைகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். அதற்கு பிறகு வாகனங்கள் சென்றன. இதனால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


You must be logged in to post a comment.