உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியில் தரமற்ற இரயில்வே பாலத்தால் உடைந்து வைகை அணையில் விவசாயத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் வீணாகி நிலங்களில் பாய்ந்தது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணையிலிருந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே குப்பணம்பட்டியை கடந்து சென்றது. அங்கு மதுரை போடி அகலபாதை இரயில்வே சுரங்கபாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருங்;களுக்கு முன்பு குப்பணம்பட்டியில் கட்டிய இரயில்வே சுரங்கபாதை பாலம் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளதால் தற்போது சேதமடைந்து காணப்படுகிறது.அதன் அருகில் திருமங்கலம் பிரதான கால்வாயில் செல்லும் தண்ணீர் அனைத்தும் சேதமடைந்துள்ள பாலத்தின் வழியாக சென்று அருகிலுள்ள நிலங்களில் பாய்ந்து வீணாகின்றது. இது போன்று தண்ணீர் விணாவதால் விவசாய செய்யமுடியாமல் போகும் நிலை உருவாகுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். தமிழக அரசு 100 நாள் மட்டும் தான் வைகை அணையில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாலத்தை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்கவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print











