மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட எம்.கல்லுப்பட்டி கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஊருக்கு நடுவே மிகப் பழமையான ஊரணி ஒன்றுஉள்ளது. இந்த
ஊரணி கடநத 15 வருடங்களுக்கு முன்பு குடிநீர் தேவைக்காக இக்கிராம மக்கள் இந்த ஊரணியை பயன்படுத்தி வந்ததாகவும், காலப்போக்கில் குப்பைகள் கொட்டுவதால் ஊரணி நீர் சாக்கடைநீராக மாறிவருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் ஊரணியில் இறைச்சி கழிவுகள், குப்பைகள் உள்ளிட்டவைகளை கொட்டுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு டெங்கு மலேரியா போன்ற தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.மேலும் இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவமாணவியர் பள்ளிக்குச் செல்வதற்கு ஊரணியை கடந்துதான் செல்ல வேண்டுமென்பதால் அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது. தற்போது தமிழகஅரசு தமிழகமெங்கும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் ஏரிகளை தூர்வாரிக்கொண்டிருக்கும்இவ்வேளையில்எம்.கல்லுப்பட்டியிலுள்ள இந்த பழமையான ஊரணியை தூர்வாரி பாதுகாக்க வேண்டுமென இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print








