உசிலம்பட்டியில் லயன்ஸ் கிளப் சார்பில் சர்க்கரைநோயாளிகளுக்கு இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம்; உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை தெருவில் உள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் மதுரை ராயல் எம்பிராசஸ் அரிமா சங்கம், லயன்ஸ் கிளப் சங்கம் மற்றும் அரவிந்த் கண் மருத்துவமணை இணைந்து நடத்திய மாபெரும் சர்க்கரை நோயாளிகளுக்கான கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளாமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.இந்த முகாமில் சர்க்கரை நோயாளிகளின் சர்க்கரை அளவு, கண்புரை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் கண்ணில் ஏற்படும் கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடுகளுக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் வினுபாலன், ராயல் எம்பிராசஸ் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, சிக்கந்தர் விஜயன், லயன்ஸ் சங்க முன்னாள் ஆளுநர், அறிவழகன், பள்ளி தலைமையாசிரியர் மதன்பிரபு மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ராஜசேகரன் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!