உசிலம்பட்டி பகுதியை பசுமையாக்க முயற்ச்சி. வேளாண்மைத் துறை சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவக்கம்.

உசிலம்பட்டி பகுதியை பசுமையாக்க முயற்ச்சி. வேளாண்மைத் துறை சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி துவக்கம். எத்தனையோ மரஙகள் இருந்தாலும் பனை மரத்திற்கு இருக்கும் சிறப்பு தனிதான்.பனை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை.பனை மரஙகள் கண்மாய் ஓரத்தில் இருப்பதால் மழைக்காலங்களில் கண்மாய் கரை மண் அரிப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது.இதனால் கண்மாய் உடைப்பு ஏற்படாமல் மழை நீர் சேகரிக்கப்படுகிறது.கண்மாய் பெருகுவதால் நிலத்தடி நீர் மட்டம் உயர்நது கிராமம் பாசன வசதி பெறுகிறது.இதனால் கிராமம் பசுமையாகக் காட்சியளிக்கும்.மேலும் பனை மரத்திலிருந்து பெறப்படும் பதநீர் மூலம் கிராமங்களில் வேலை வாய்ப்பு உருவாகும்.இதனை உணர்ந்த தமிழக அரசு வேளாண்மைத்துறை சார்பில் பனை விதைகளை கிராமங்கள் தோறும் நடும் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இதன்படி அழிந்து வரும் பனைமரங்களை மீட்டெடுக்கும் விதமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள அல்லிகுண்டம், மானூத்து, ஜோதில்நாயக்கணூர், ராஜக்காபட்டி, எருமார்பட்டி போன்ற பகுதிகளில் தமிழக அரசின் வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி இயக்கம் சார்பில் 50 ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மைத்துறை இயக்குநரும், மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளருமான தனலட்சுமி பனைவிதையை நட்டு தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து வேளாண்மை; துறை அதிகாரிகள், பள்ளி குழந்தைகள், கிராமமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வேளாண்மை துறை அதிகாரிகளும் இணைந்து பனைவிதைகளை நட்டனர்.

மேலும் விவசாயிகள் தங்களது தோட்டபகுதியில் பனை விதைகளை நட வேளாண்மைதுறை சார்பில் இலவசமாக பனைவிதைகள் வழங்கப்பட்டன.இதனால் கிராமமக்கள் பலரும் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் உசிலம்பட்டி வேளாண்மைதுறை இயக்குநர் ராமசாமி,புவனேந்தன், மற்றும் அதிகாரிகள் கதிரேசன், ரமேஸ், ராஜேஸ், குமார் உட்பட பொதுமக்கள் பலர்கலந்துகொண்டனர்.கிராமங்களை பசுமையாக்க தமிழக அரசால தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கப்பட்ட இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!