பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுக்கும் முயற்சசியாக உசிலம்பட்டியில் முதல் நெல் விதை திருவிழா.

அரிசி சாப்பிட்டால் சர்க்கரை வியாதி உள்ளிட்ட சில வியாதிகள் வரும் என சிலர் கூறுவார்கன்.ஆனால் நமது முன்னோர்கள் அனைத்து வியாதிகளையும் அரிசியினால் போக்கும் நெல் விதைகளை கண்டுபிடித்து உபயோகித்துள்ளனர்.வைகுண்டா வாழைப்பூ சம்பா திருமணி மிளகி சன்னா சிங்கினிகாரு போன்ற பல்வேறு நெல் ரகங்கள் தமிழ்நாட்டில் இருந்துள்ளன.தற்போது இவை புழக்கத்தில் இலலாத நிலையில் இவற்றை மீட்டெடுக்கும் முயறச்சியாக கிரியேட் மற்றும் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை சங்கம் சார்பில் பாரம்பரிய நெல் முதல் திருவிழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்றது.உசிலம்பட்டி தேவர் மகாலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 50க்கும் மேற்ப்பட்ட நெல் ரக விதைகள் மூலிகை விதைகள் மற்றும் மாட்டுச்சாணத்தால் உருவாக்கப்பட்ட இயற்கை கலைநயம் மிக்க பொருட்கள் ஆகியவை கணகாட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை பொதுமக்களும் விவசாயிகளும் ஆர்வமுடன் பார்த்து பாரம்பரிய நெல் விதைகளை வாங்கிச் சென்றனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!