உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் வீர தியாகிகளுக்கு கட்டப்பட்டு வரும் மணிமண்டப பணிகளை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆய்வு மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் கைரேகை சட்டத்துக்கு எதிராக ஆங்கிலேயரை எதிர்த்து போராடி உயிர்தியாகம் செய்து உயிரிழந்த வீர தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது அதிமுக அரசு பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மணிமண்டபம் கட்ட அரசானை வெளியிடப்பட்டு போதிய நிதி ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் மணிமண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அயப்பன் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைதொடர்ந்து திருமங்கலம் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டுள்ள கால்வாய் பெருங்காமநல்லூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் வரத்து கால்வாய் மூலமாக தண்ணீர் கொண்டுவர வேண்டுமென மக்கள் கோரிக்கையை ஏற்று பிரதான கால்வாயில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மெற்கொண்டு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் துரை தனராஜன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா. சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் பிச்சைராஜன், மாவட்ட மாணவரணி செயலாளர் மகேந்திரபாண்டி, முன்னாள் பெருந்தலைவர் பால்பாண்டி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!