உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் உள்ள 200வருட பழமையான பஞ்சாங்க ஊரணி மற்றும் வரத்து கால்வாயை மீட்டெடுத்த தன்னார்வ இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எருமார்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 200வருட பழமையான பஞ்சாங்க ஊரணி உள்ளது. இந்த ஊரணி சுமார் 3ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஊரணியை முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் ரூ7லட்சம் மதீப்பீட்டில் தூர்வாரப்பட்டு ஊரணியின் நடுவே சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்துள்ள தொடர் மழையால் ஊரணியில் உள்ள சிமென்ட் தொட்டியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆனால் ஊரணியை தூர்வாரிய அதிகாரிகள் அதற்கான வரத்து கால்வாயை தூர்வாரப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து சுமார் 2கிலோமீட்டர் தொலைவிற்கு தனிநபர் ஆக்கிரமிப்பால் வரத்து கால்வாய்கள் விவசாய நிலமாக மாறியிருந்தது. இந்நிலையில் உசிலம்பட்டி பகுதியில் நீர்ஆதாரங்களை மீட்டெடுத்து வரும் 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினர் சௌந்திரபாண்டின், பால்ராஜ் தலைமையில் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வரத்து கால்வாய் பாதைகள் குறித்தும், 7லட்சம் செலவில் தூர்வாரபட்ட ஊரணி பயன்பாடு இல்லாமல் இருப்பது குறித்தும், உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து ஆய்வு செய்ய கோட்டாட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து அதிகாரிகள் மற்றும் 58கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவினர் தலைமையில் ஆக்கிரமிப்புக்கள் அகற்றும் பணி நடைபெற்றது. 2கிலோமீட்டர் தொலைவிற்கு ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு கடந்த 30 வருடங்களாக மறைந்திருந்த வரத்துகால்வாயை கண்டுபிடித்து ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரப்பட்டுள்ளது. எருமார்பட்டி பஞ்சாங்க ஊரணியிலிருந்து மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வரை 2கிலோ மீட்டர் தொலைவு 30அடி அகலத்திற்கு கடந்த இரண்டு நாட்களில் வரத்து கால்வாய் சரிசெய்யப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே சங்கிலித்தொடராக இருந்த மற்றொரு ஊரணியையும் சீரமைக்கபட்ட மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது.உசிலம்பட்டி பகுதியில் தொடர்ந்து நீர்நிலைகளை மீட்டுவரும் 58கிராம கால்வாய் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!