உசிலம்பட்டியில் இறைச்சி, மீன் கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் திடீர் ஆய்வு. கெட்டுப்போன அழுகிய 200கிலோ மீன்கள், கோழி இறைச்சிகள் பறிமுதல்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் ஆடி முதல் நாள் என்பதால் பண்டிகையை போல் கொண்டாடும் விதமாக அசைவ உணவுகள் தான் பெரும்பாலான வீடுகளில் இடம்பெறும். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக மக்களிடம் பண புழக்கம் இல்லாததல் மக்கள் இறைச்சி வாங்குவதில் ஆர்வம் காட்டவில்லை. மேலும் இறைச்சிகளின் விலையும் அதிகரித்துள்ளது. உசிலம்பட்டியில் 1கிலோ ஆட்டுஇறைச்சி 800ரூ முதல் 1000ரூபாய் வரையிலும், மீன்கள் 200ரூ முதல் 350ரூ வரையிலும், கோழிக்கறி 250ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள இறைச்சி கடைகளில் மதுரை மாவட்ட உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் உசிலம்பட்டி உணவுப்பாதுகாப்புதுறை அதிகாரி லிங்கம் தலைமையிலான நகராட்சி சுகாதார துறை ஆய்வாளர்கள் அகமதுகபீர், சரவணபிரபு உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது 200கிலோ கெட்டுப்போன மீன்கள், கோழிக்கறிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து. கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!