உசிலம்பட்டி அருகே வெள்ளாடு செம்மறி ஆட்டுக்குட்டிகளை ஈன்ற சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது, சுற்றுவட்டார கிராம மக்களுக்கு அதிசயத்துடன் பார்த்து செல்கின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் – அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன்., தனது வீட்டில் பால்பண்ணை வைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருவதாக கூறப்படுகிறது.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவந்தானிலிருந்து கர்ப்பமாக இருந்த வெள்ளாடு ஒன்றை வாங்கி வந்த நிலையில் இந்த வெள்ளாடு இரு தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றதாக கூறப்படுகிறது.இதில் அதிசயமாக இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளும், ஒரு வெள்ளாட்டையும் ஈன்ற சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாடு செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்றதை அறிந்த கிராம மக்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வதாக மகேந்திரன் தெரிவிக்கின்றார்.இது குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்ட போது இனப்பெருக்கத்தின் போது இது போன்று நடைபெறும் என்றும் அதிலும் அப்போதாவது மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!