உசிலம்பட்டி அருகே அனுமதியின்றி செயல்பட்டு வந்த காப்பகத்திலிருந்த 6 முதியவர்கள் மீட்கப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் குழந்தைகள் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாக அரசு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முதியோர் காப்பகங்கள் எங்கெங்கு உள்ளது என உடனடியாக ஆய்வு நடத்தி சரியான முறையில் காப்பகங்கள் இயங்கி வருகிறது என மதுரை மாவட்ட ஆட்சியர் உத்;தரவுப்படி உசிலம்பட்டி கோட்டாட்சியர் ராஜ்குமார் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் இயங்கி வரும் அன்னை தெரசா காப்பகம் உரிய அனுமதி பெறாமல் சிறுவர்கள் காப்பகம் என கூறி முதியவர்களையும் சேர்த்திருந்தாக கூறப்படுகிறது.இதன் உரிமையானர் தமிழ்ச்செல்வி காப்பகத்திற்கு விண்ணப்பித்திருந்த போதும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை.காப்பகத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததில் 8 முதியோர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இருவர் வெளியூர் சென்று விட்ட நிலையில் மீதமிருந்த 5பெண் 1ஆண் உள்பட ஆறு பேரை உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்..இரண்டு முதியவர்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் வந்தவுடன் அவர்கள் 2 பேரையும் தொட்டப்பநாயக்கனூர் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!