மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிட்குட்பட்ட குமார் தெருவில் வசித்து வருபவர் மகேந்திரன் (49). இவர் அத்திபட்டியில் உள்ள அரசு மதுபானக்கடையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை வழக்கம் போல் மகேந்திரன், இவரது மனைவி ரேகா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் உறங்கிகொண்டிருந்த போது நள்ளிரவில் வீட்டின் கதவு கண்ணாடியை உடைத்து உள்ளே சென்ற 3பேர் கொண்ட மர்மநபர் கும்பல் தம்பதியை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை காட்டி மிரட்டி 10பவுன் தங்க செயினை பறித்து சென்றனர். அதே போல் அருகில் உள்ள காந்தி என்பவரது வீட்டிலும் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்றனர். இவர் குடும்பத்துடன் வெளிமாநிலத்தில் தங்கி முறுக்கு வியாபாரம் செய்து வரும் நிலையில் இவர் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு குறித்து தெரியவில்லை. தகவலறிந்த உசிலம்பட்டி போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்த தடயங்களை சேகரித்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.உசிலம்பட்டியில் தொடர்ந்து ஒரே நாளில் அடுத்தடுத்து வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
உசிலைசிந்தனியா


You must be logged in to post a comment.