பெட்ரோல், டீசல் விலையை மக்கள் வீதியில் இறங்கி போராடினால் தான் குறையுமே தவிர அரசியல் கட்சியினரை நம்பினால் பலனில்லை -சர்வதேச உரிமைகள் கழக நிறுவனர் சுரேஸ்கண்ணன் .

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி எஸ்ஓஆர் நகரில் நடைபெற்ற பிரபல தொழிலதிபரின் இல்ல திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உசிலம்பட்டிக்கு வருகை தந்த சர்வதேச உரிமைகள் கழக நிறுவனத்தலைவர் சுரேஸ்கண்ணன் பேருந்து நிலையம் முன்பு உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கும், மறைந்த பார்வர்ட் பிளாக் கட்சியின் மூத்த தலைவருமான பிகே மூக்கையாத்தேவர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சர்வதேச உரிமைகள் கழக நிறுவனர் சுரேஸ்கண்ணன் தமிழகத்தில் பெட்ரோல்,டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் ஏழை எளிய மக்கள் மிகவும் பாதிக்கபடுவதாகவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அரசியல் கட்சியினர் பேசுவதை மக்கள் நம்பினால் எந்த பலனும் இல்லை எனவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மக்களே நேரடியாக போராட வேண்டுமென அவர் தெரிவித்தார். மாவட்ட துணைத் தலைவர் சூரிய பாண்டி தலைமையில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!