உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் செய்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்மன்ற தொகுதியில் அதிமுக சார்பில் இரட்டை இலை சினனத்தில் வேடபாளராக அய்யப்பன் போட்டியிடுகிறார். இந்நிலையில் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு அதிமுக வேட்பாளர் பி.அய்யப்பனை ஆதரித்து நடிகை விந்தியா மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது மக்கள் மத்தியில் பேசிய நடிகை விந்தியா, பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் கமிசன் தொகையின்றி காய்ந்து கொண்டிருக்கின்றனர். காசு பணம் துட்டு மணி என காய்ந்து கிடப்பவர்களை ஆட்சியில் வைத்தால் என்ன ஆகும் என உங்களுக்கே தெரியும் எனவும், மக்களே கூகுளில் திமுக என டைப் செய்தாலே பிரியாணி, பியூட்டி பார்லர், போலிஸ் ஸ்டேசன் என திமுகவின் அராஜகம் வரிசைப்படி வரும் உனவும் குற்றம் சாட்டி பேசினார். மேலும் திமுகவில் கூட்டணியாக அமைத்துள்ளவர்கள் எதற்கும் ஆகாதவர்கள் 10 கட்சி கூட்டணி இருந்தாலும் சரி 100 கட்சி கூட்டணியில் வந்தாலும் அதிமுகவை அளிக்க முடியாது தொட்டு பார்க்க கூட முடியாது என நடிகை விந்தியா பேசினார்.மேலும் கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த சூழலில் தற்போதைய எம்எல்ஏ பா.நீதிபதி தொடர்ச்சியாக இன்று மூன்றாவது முறையாக அமைச்சர் கலந்து கொண்ட அதிமுக பிரச்சாரத்தையும் புறக்கணித்தது அதிமுகவினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!