மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொண்ணையா மகன் ராஜ்குமாரும் (25) அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜா மகன் அபிஷேக் (21) என்வரும் கொத்தனாராக வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக இருவரும் இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பெரியசெம்மேட்டுப்பட்டியில் வந்த போது எதிரே வந்த டெம்போ வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ராஜ்குமார், அபிஷேக் ஆகிய இரு வாலிபர்களும் தூக்கிவீPசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். தவகலறித்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதணைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து குறித்து உசிலம்பட்டி போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.