அமமுக ஆட்சிக்கு வந்தால் 58கிராம கால்வாய்க்கு நிரந்தர அரசானையும்,கொண்டுவரப்படும்.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 6ம்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சியினர் பிரச்சாரத்திலும்,தொகுதி பங்கீட்டிலும் ஆர்வம் காட்டிவருகின்றனர். இன்று அமமுக சார்பில் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் உசிலம்பட்டி தொகுதி வேட்பாளர் பட்டியலும் அடங்கியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்;பு செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான இ.மகேந்திரன் வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையடுத்து உசிலம்பட்டியில் உள்ள மாவட்ட அலுவலகம் முன்பு கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினார்கள். மேலும் கட்சிநிர்வாகிகள் அவருக்கு எழும்பிச்சம்பழம் வாழ்த்து தெரிவித்தனர். அதனைதொடர்ந்து வேட்பாளர் மகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமமுக ஆட்சிக்கு வந்தவுடன் உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மகளிர் கல்லூரி, மகளிர் பள்ளிகள் மற்றும் 58கிராம கால்வாய்க்கு நிரந்தர அரசானை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!