மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாகஜோதி (49). இவர் இந்த பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக எம்.கல்லுப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உசிலம்பட்டி காவல்துணை கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின்பேரில் சார்புஆய்வாளர் மீனாட்சி உள்ளிட்ட போலீசார் நாகஜோதியின் வீட்டை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 250 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, நாகஜோதியை கைது செய்தனர். இது குறித்து எம்.கல்லுப்பட்டி போலீசார் நாகஜோதி மீது வழக்குபதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
உசிலைசிந்தனியா


You must be logged in to post a comment.