உசிலம்பட்டியில் பொதுமக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மணல் சிற்பத்தில் வித்யாசமான ஓவியம். பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.

உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு எலிப்பொறிக்குள் இருக்கும் மீனுக்கு ஆசைப்பட்டு சிக்கும் எலி போல பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்காளர்கள் சிக்க வேண்டாமென தேர்தல் ஆணையத்தால் வரையப்பட்ட விழிப்புணர்வு ஓவியம் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது.தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு கட்சியினர் விருப்ப மனு வழங்குதல், நேர்காணல், பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் ஆர்வம் காட்டிவரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் அதிகாரிகள் ஓட்டுக்கு பணம் வாங்குவதையும், கொடுப்பதையும் தடுக்கும் விதமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் முன்பு ஓட்டுக்கு பணம் வாங்குவதை தவிர்க்க வலியுறுத்தியும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் அதிகாரிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வித்யாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 30அடி நீளமும்,15அடி அகலத்திலும் மணலை கொண்டு சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பம் எலிப்பொறிக்குள் இருக்கும் மீனுக்கு ஆசைப்பட்டு சிக்கும் எலி போல பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்காளர்கள் சிக்க வேண்டாமென்பதை உணர்த்தும் விதமாக இருந்ததால் அந்த சிற்ப ஓவியம் பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இந்த மணல் சிற்பத்தை பார்வையிட தேர்தல் அதிகாரி ராஜ்குமார் பழைய வழக்கமுறைப்படி மாட்டுவண்டியில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவாறே அலுவலகத்திலிருந்து வந்து மணல் சிற்பத்தை பார்வையிட்டார். இதில் தேர்தல் உதவி அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

உசிலைசிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!