வெள்ளைமலைப்பட்டியில் பண்ணை தோட்டத்தில் மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் காலாமானார். அவரது உடல் மருத்துவமணையிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இன்று அதிகாலையில் அவரது சொந்த ஊரான மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி டேவிட் பண்ணைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இந்நிலையில் தா.பாண்டியன் உடலுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமைப்பு செயலாளர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினரும்;, மதுரை எம்பியுமான வெங்கடேசன், திமுக சார்பில் தேனி மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன், உசிலம்பட்டி 58கிராம பாசன விவசாய சங்க நிர்வாகிகள், உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் பலர் மாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடலுக்கு பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்திய பின் உடலை டேவிட் பண்ணையில் உள்ள தோட்டத்தில் தா.பாண்டியன் உடல் எடுத்துச்செல்லப்பட்டு, உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. தா.பாண்டியன் கிறிஸ்த்துவர் என்பதால் கிறிஸ்த்துவ முறைப்படி சவப்பெட்டியில் உடலை வைத்து அடக்கம் செய்யப்பட்டது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!