மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் பாஜக சார்பில் நிதி திரட்டுவதற்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில் அதற்காக தமிழர்களின் பங்கு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிதி திரட்ட உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி பஞ்சாயத்திற்குட்பட்ட மாலைப்பட்டி கிராமத்தில் உள்ள ராமர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிதி திரட்டுவதற்கான சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடு நடைபெற்றது. அதனைதொடர்ந்து உசிலம்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் பாஜகவினர் பொதுமக்களிடையே நேரடியாக சென்;று நிதி திரட்ட உள்ளனர். இந்த நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை பாஜக தெற்கு மண்டல தலைவர் முருகன் செய்தார். இதில் மாவட்ட தொழிற்துறை துணை தலைவர் வனராஜா தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் தங்கராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் பிரச்சார பிரிவு பொருப்பாளர் ரஜ்சித்குமார், பிரச்சார பிரிவு மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், மண்டல தலைவர் சின்னசாமி, ஒன்றிய துணை தலைவர் பழனி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!