கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. தமிழக அரசு இன்று முதல் 10மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு விதிமுறைகளை கடைபிடித்து வகுப்புக்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவணம்பட்டி ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளியான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு விதிப்படி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் வருகை தந்தன. பள்ளி வாசல் முன்பு மாணவர்களுக்கு வெப்பநிலை கருவி கொண்டு சோதனை செய்த பின், கிருமி நாசினியால் கைகளை கழுவியும், முககவசம் அணிந்து கொண்டும் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நோட்டிசும் வழங்கப்பட்டது. அதனைதொடர்ந்து பாடத்திட்டம் குறைக்கப்பட்டது குறித்து மாணவர்களுக்கு விளக்கம்அளித்து வகுப்புக்கள் தொடங்கப்பட்டது.இதில் குறைந்த அளவிலான மாணவர்களே வருகை தந்திருந்தன. மேலும் பள்ளி தலைமையாசிரியர் ரேச்சல் தலைமையிலான ஆசிரியர்கள் குழுவினர் பள்ளி வளாகத்தில் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலை சிந்தனியா


You must be logged in to post a comment.