அடிபட்டு எலும்பு முறிவு ஏற்ப்பட்ட ஆதரவற்றவரை அரவணைத்த அரசு மருத்துவமணை.ஓரு மாதத்தில் நடக்கச் செய்து சாதனை.

மருத்துவமணை என்பது நோயாளிகளின் நோய் தீர்க்கும் இடமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அடிபட்டு வரும் ஆதரவற்றவர்களை அரவணைப்பதில் அன்னையாகவும் திகழ்கிறது என்பதை நிரூபித்துள்ளது உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமணை.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ளது மாவட்ட அரசு தலைமை மருத்துவமணை.இங்கு கடந்த மாதம் 24 ம் தேதி பேரையூர் அருகே பூசலப்புரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்.,இவருக்கு தாய் தந்தை யாருமில்லாத நிலையில் நடந்து செல்லும்போது தவறி கீழே விழுந்துள்ளார்.; ஆதரவற்று அனாதையாக சாலையில் கிடந்தவரை அருகிலிருந்தவர்கள்; உசிலம்பட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.மருத்துவர்கள் பரிசோதித்ததில் இடதுபுற தொடை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் உசிலம்பட்டி மருத்துவர்கள் எலும்பு முறிவு ஏற்பட்ட இடத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு மாதமாக சிறப்பான சிகிச்சை அளித்து அவர் நடக்கக் கூடிய அளவிற்கு முன்னேற்றமடைய செய்துள்ளனர்..,மேலும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை முறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் மேலும் உயர் சிகிச்சைக்காக மதுரை தோப்பூர் அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தளர்.இத்தனைக்கும் இவரிடமிருந்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட எந்த ஒரு ஆவணம் இன்றி அரசு மருத்துவமணையை நம்பி வந்தவரை சிறப்பான சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.இதே போன்று பல ஆதரவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து சிகிச்சையளித்து உசிலம்;பட்டி அரசு மருத்துவமணை காப்பாற்றியதாகத் தெரிகிறது.இதே போன்று உசிலம்பட்டி அரசு மருத்துவமணை பல்வேறு அறுவை சிகிச்சையில் சிறந்த மருத்துவமணையாக விளங்குவதாக தெரிவித்தார்.அரசு மருத்துவமணை என்றாலே அய்யய்யோ என முகம் சுளிக்கும் இக்காலத்தில் அனாதைக்கும் நாங்கள் துணை இருப்போம் எனக் காட்டியுள்ளனர் உசிலம்பட்டி அரசு மருத்துவமணை

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!