உசிலம்பட்டி அருகே முதல்வர் பங்கேற்ற கிராமசபைக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டு முடிவுற்ற 12 திட்டங்களை அமைச்சர்கள் துவக்கிவைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் கடந்த அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று தமிழக முதலமைச்சர் மு க.ஸ்டாலின் கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்டு பாப்பாபட்டி கிராமத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்தார்.இதன்படி பாப்பாபட்டி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகட்டிடம் ,புதிய நியாவிலைக்கடை, மயான காத்திருப்பு அறை , பகாத்தேவன்பட்டியில் அங்கன்வாடி,மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட 12 திட்டங்கள் ரூபாய் ஒரு கோடியே 30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு நிறைவுபெற்றுள்ளன.இந்த புதிய திட்டத்தை வணிகவரி மற்றும் பத்திரத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு; நலத் திட்டங்களை துவக்கி வைத்தனர்.மேலும் மரக்கன்றுகள் நட்டு வைத்து அரசு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தனர்.

உசிலை சிந்தனியா

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!