உசிலம்பட்டியில் நடிகர் விவேக் நினைவுநாளை முன்னிட்டு மண்ணின் மரங்களான கடம்ப மரக்கன்றுகள் நடப்பட்டன.

நடிகரும் சின்னக்கலைவானர் என அழைக்கப்படுவரும் மரம் வளர்பதை ஊக்குவித்து இயற்கையை நேசித்தவருமான விவேக்கின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.இதனையொட்டி 58 கிராம இளைஞர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை மண்ணின் மரங்கள் என அழைக்கப்படும் கடம்பமரங்கள் நடும் நிகழ்வு உசிலம்பட்டியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு உசிலம்பட்டி நகர் மன்றத்தலைவர் சகுந்தலா தலைமையேற்று கடம்ப மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

உசிலம்பட்டியின் முக்கிய இடங்கள் மற்றும் கிராமப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன.பாண்டிய மன்னர்கள் காலத்தில் வைகை ஆற்றங்கரையோரங்களில் நிழல் மற்றும் மனதிற்கு அமைதியைத்தரும் கடம்பமரங்கள் அதிகளவு வளர்ந்திருந்ததால் கடம்ப மரங்கள் மதுரை மண்ணின் மரங்கள் என அழைக்கப்பட்டதாகவும் தற்போது புழக்கத்தில் கடம்பமரங்கள் இல்லாத சூழ்நிலையில் மர இனக்காவலன் நடிகர் விவேக்கின் நினைவாக காலப் போக்கில் மறைந்து போன கடம்ப மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப் பட்டதாக விழா ஒருங்கிணைப்பாளர் சௌந்திரபாண்டி தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மதன்பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!