உசிலம்பட்டி அருகே இலவச மின்சாரத்திற்கு ரூ30ஆயிரம் லஞ்சம் கேட்ட உதவிப்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார்.இவர் தனது தோட்டத்திற்கு இலவச மின் இணைப்பு கேட்டு உத்தப்பநாயக்கனூர் மின்வாரியத்தில் விண்ணப்பித்துள்ளார்.மனுவை பரிசீலனை செய்த மின்வாரிய உதவிப்பொறியாளர் சக்திவேல் (45) சசிக்குமாரிடம் மின் இணைப்பு வேண்டுமென்றால் ரூ 30ஆயிரம் இலஞ்சம் கொடுத்தால் மின் இணைப்பு கொடுப்பதாகக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சசிக்குமார் இலஞ்ச ஒழிப்பு போலிசில் புகார் அளித்தார்.மதுரை இலஞ்ச ஒழிப்பு போலிசார் டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையில் சசிக்குமாரிடம் இராசயனம் தடவிய பணத்தை கொடுத்து உத்தப்பநாயக்கனூர் மின் அலுவலகத்தில் பணத்தை சக்தி வேலிடம் கொடுக்கும் போது மறைந்திருந்து சக்தி வேலை கைது செய்தனர்..இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!