ஸ்டாலின் முதல்வராக முடியாது என நான் சொல்லவில்லை அவருடைய அண்ணன் முகஅழகிரி தான் சொல்கிறார் என வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் பேச்சு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பா.நீதிபதி தலைமையில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 உடன் அரிசி,கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நான்தான் முதல்வராக வருவேன் என சட்டையை கிழித்து திரிகிறார் எனவும், ஸ்டாலின் உடன் பிறந்த அண்ணன் முக அழகிரியே சொல்கிறார் எப்போதும் ஸ்டாலின் முதல்வராக வரமுடியாது எனவும், இதனை நான் சொல்லிவல்லை எனவும் பேசினார். இதில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், கோட்டாட்சியர் ராஜ்குமார், வட்டாட்சியர் விஜயலெட்சுமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!