உசிலம்பட்டியில் முப்படைத்தளபதி பிபின் ராவத் மறைவுக்கு பள்ளி குழந்தைகள் அஞ்சலி செலுத்தினர்.

இந்தியாவின் முப்படைத்தலைமை தளபதியான பிபின் ராவத் குன்னூர் அருகே நடைபெற்ற விபத்தில் அவரது மனைவி உள்பட 13 பேர் பலியானார்கள்.இந்நிலையில் ;இவருடைய மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வகையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் பள்ளிக்குழந்தைகள் மெழுகுவர்த்தி ஏற்றி அவருடைய படத்திற்கு பூப்போட்டு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் 5 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமை ஆசிரியர் மதன்பிரபு உள்பட மாணவ மாணவிகள் பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர்.

உசிலை  சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!