உசிலம்பட்டி அருகே மயானத்திற்கு பாதை வசதி இல்லாததால் ஒரு கிலோ மீட்டர் பிரேதத்தை தூக்கிச் செல்லும் அவலம்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நடுப்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்தது பெருமாள் கோவில்பட்டி கிராமம்.இக்கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இக்கிராமத்திற்கென பொது மயானம் கிராமத்திலிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது..இங்கு செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை.இதனால் தனியார் நிலத்தின் வழியாக பிணத்தை தூக்கி கொண்டு ஒத்தயடி குறுகிய பாதையில் செல்ல வேண்டியுள்ளது.மேலும் வேளாண் சமயத்தில் நிலங்களில் நெல் பருத்தி தட்டை போன்றவை நடவு செய்யப்பட்டப்பட்டிருந்தால் அமரர் ஊர்தி வாகனம் அப்பகுதியில் செல்ல முடியாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.இதனால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம்வரை பிணத்தை தூக்கி கொண்டு செல்கின்றனர் இக்கிராமமக்கள்.சில நேரங்களில் நிலத்தினுள் இறங்கி நடப்பதால் பயிர்கள் சேதமடைவதாக நிலத்தின் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்..இந்நிலை கடந்த 20வருடமாக நீடித்து வருகிறது.ஒவ்வொரு கிராமசபைக் கூட்டத்திலும் மயானத்திற்கு பாதை வசதி வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் கோரிக்கை வைத்த போதும் எவ்வித பதிலும் இல்லை.இதனால் பெருமாள் கோவில் பட்டி கிராமத்தில் மயானத்திற்கு முறையான சாலை வசதி செய்து தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!