இந்திய ஒற்றுமை பயண நினைவு கம்பம்: பாம்பனில் காங் கொடியேற்றம்..

ராமநாதபுரம், அக்.1- காங்கிரஸ் இளம்தலைவர் ராகுல் காந்தி எம்பி  கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடா யாத்ரா (இந்திய ஒற்றுமை பயணம்) கடந்த செப்.7 ஆம் தேதி ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி, அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பர்னாண்டோ  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள தனது வீட்டு நுழைவு வாயில் முன் 70 அடி உயர கொடி கம்பம் நிறுவினார்.

இக்கம்பத்தில்  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கொடியை  ஏற்றிவைத்தார். இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமி,  மாவட்ட காங்கிரஸ் பொறுப்பு குழு தலைவர் மலேசியா எஸ்.பாண்டி, சட்டமன்ற உறுப்பினர்கள்  lராம.கருமாணிக்கம் (திருவாடானை),  மாங்குடி (காரைக்குடி)முன்னாள் மாவட்ட தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட பொருளாளர் பி.ஆர்.என். ராஜா ராம்பாண்டியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ரமேஷ் பாபு, மாநில செயலர் ஆனந்தகுமார்,  முன்னாள் மாவட்ட தலைவர் எம்.தெய்வேந்திரன் மாவட்ட துணைத்தலைவர் துல்கீப் கான், மாவட்ட மகளிரணி தலைவர் ராம்லட்சுமி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் இப்ராஹீம், திருப்புல்லாணி கிழக்கு வட்டாரத் தலைவர் சேதுபாண்டியன், மண்டபம் மேற்கு வட்டார தலைவர் நத்தர்ஷா, மண்டபம் கிழக்கு வட்டார முன்னாள் தலைவர் எம்ஜி. விஜயரூபன்  உள்பட பலர் பங்கேற்றனர்.  பின்னர் ராமேஸ்வரத்தில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!