இராமநாதபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய அம்பேத்கார் எம்ப்ளாயீஸ் யூனியன் துவக்க விழா..

இராமநாதபுரம் தமிழ்நாடு மின்சார வாரிய அம்பேத்கார் எம்ப்ளாயீஸ் யூனியன் கிளை துவக்க விழா தொழிற்சங்க கொடி ஏற்றல் கொடியேற்றத்துடன் நடைபெற்றது.

இந்த விழாவில்  முக்கிய கோரிக்கையாக தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அனைத்து வகுப்பு பகுதியிலும் எஸ்சி எஸ்டி ஊழியர்களுக்கான பணியிடங்கள் சுமார் 10 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன அவற்றை உடனடியாக நிரப்ப கோரிக்கை விடுத்தனர்.  எஸ்சி எஸ்டி பணியாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்கிற ஒவ்வொரு மின்வெட்டை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் அலுவலர் நியமிக்கப்பட வேண்டும் என்றும் அனைத்து அலுவலகங்களிலும் இந்திய அரசியல் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படம் வைத்து வேண்டும்,  அனைத்து வட்டாரங்களிலும் அம்பேத்கர் எம்ப்ளாயீஸ் யூனியன் அலுவலகம்,  துப்புரவு பணியாளர்களை சுகாதாரப் பணியாளர்கள் என்று அழைக்க வேண்டும்,  பகுதி நேர துப்புரவு பணியளர்களுக்கு இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரவி,  முன்னாள் மாநில அமைப்பு செயலாளர் திராவிடச் செல்வம், சிறப்பு விருந்தினர்கள் பாலசுப்பிரமணியன்,  ராஜேந்திரன், மாரியப்பன்,  உஷா பிரியன், பாலமுருகன், லோகேஸ்வரன், சங்கர் ஆனந்த் பால்சாமி,  மாநிலத் தலைவர் ஆதிதிராவிடர் மாநில பொதுச்செயலாளர் சாமி,  மாநில பொருளாளர் அசோகன்,  மாநில துணை தலைவர் சிவக்குமார்,  மதுரை மண்டல செயலாளர் கணபதி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக  முனியசாமி நன்றியுரையாற்றினார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!