ஒன்றிய அரசின் மக்கள் விரோத வேளாண்மை விரோத பட்ஜெட்டை கண்டித்து அகில இந்திய விவசாய சங்க போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் ஒன்றிய அரசின் பட்ஜெட் நகலை எரிப்பு போராட்டம் நடைபெற்றது. எஸ்.கே.எம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மயில்வாகனம் தலைமையில் தமிழ்நாடு விவசாய சங்க தாலுகா செயலாளர் முருகேசன், தாலுகா தலைவர் செல்வம், தாலுகா பொருளாளர் அந்தோணி, மாவட்ட துணைச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், சிபிஎம் நகர் செயலாளர் அப்துல் காசிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

You must be logged in to post a comment.