கீழக்கரையில் மர்ம நபர்கள் நடமாட்டம்.. கூலிப்படைகளா??

கீழக்கரையில் இன்று (31-05-2018) நள்ளிரவு நேரத்தில் பருத்திக்காரத் தெரு பகுதியில்,  அத்தெருவுக்கு சம்பந்தம் இல்லாத நபர்கள் நடமாட்டம் இருந்துள்ளதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.  ஆரம்பத்தில் சந்தேகத்தின் பேரின் அழைத்து அத்தெரு மக்கள் விசாரித்துள்ளனர். ஆனால் அவர்கள் தடுமாறுவதை கண்டு சந்தேகமடைந்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

பின்னர் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய அந்த மூன்று நபர்களும் சமூக விரோதமான முறையில் தொழில் செய்பவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒரு கோஷ்டியினர் மற்றொரு கோஷ்டியினரை பலி வாங்க அனுப்பியதாக கூறியுள்ளனர். பின்னர் அத்தெரு மக்கள் அந்த நபர்களை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

ரமலான் மாதம் என்பதால் இரவு நேரங்களில் கடைத் தெரு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்துள்ளதால், இது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண முடிந்துள்ளது.காவல்துறையினர் இது போன்ற செயல்பாடுகளை தீர கண்காணித்து கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!