இராமநாதபுரம் அருகே முற்றிலும் எரிந்து கரிக்கட்டையாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் எலும்புக்கூடு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இராமநாதபுரம் அருகே உத்தரகோசமங்கை விலக்கு கருங்குளம் கண்மாய் காட்டு கருவேல மரங்கள் நிறைந்த பகுதியில் முழுவதும் எரிந்து கரிக்கட்டையாக அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் எலும்புக்கூடு கிடந்தது. அப்பகுதியில் ஆடு மேய்த்த சிறுவர்கள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பான புகார் படி சத்திரக்குடி போலீசார் சம்பவ இடம் சென்று அங்கு கிடந்த எலும்புக்கூட்டை கைப்பற்றினர்.
இதை தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் அங்கு சென்று தடயங்களை கைப்பற்றினர். எலும்புக்கூடு அருகே கிடந்த சுடிதார், துப்பட்டா, வலையல்கள் அடிப்படையில் விசாரணையை போலீசார் துரிதப்படுத்தி உள்ளனர். சம்பவ இடத்தை ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.



You must be logged in to post a comment.