புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஏனாதி வயல்பகுதியில் வறண்ட நிலையில் தண்ணீரின்றி விவசாய கேனி ஒன்று உள்ளது. அந்த வழியாக சென்றவர்கள் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ் ஆகியோர் தண்ணியில்லா கிணற்றில் அடையாளம் தெரியாத நிலையில் சுமார் 55 வயது
மதிக்கத்தக்க ஒரு ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததை பார்வையிட்டனர். பொன்னமராவதி தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் மீட்புப் படையினர் சடலமாக கிடந்த பிரேதத்தை மீட்டு காவல்துறை உதவியுடன் பொன்னமராவதி வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அடையாளம் தெரியாத நிலையில் கிடந்த பிரேதம் சுமார் இரண்டு நாட்கள் ஆகும் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர் உள்ளூர் நபரா வெளியூர் நபரா இவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் வீசப்பட்டவரா? அல்லது தற்கொலை செய்தாரா? என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









