இராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்பகுதியில் இலங்கை பைபர் படகு கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய மாநில உளவுத்துறை போலிசார் படகை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
இராமேஸ்வரம் அருகே சேரான் கோட்டை கடற்கரை பகுதியில் இலங்கையைச சேர்ந்த பைபர் (கண்ணாடி இழை படகு ஒன்று நேற்று நள்ளிரவு இப்பகுதிக்கு வந்தது. இது குறித்து மீனவர்கள் தகவல் அடிப்படையில் மத்திய, மாநில உளவு பிரிவு போலீசார்
சேராங்கோட்டை கடற்பகுதியில் ஒதுங்கி நின்ற அப்படகை கைப்பற்றி தீவிரமாக விசாரித்து வருகின்றனர். படகில் மீன்பிடி வலை, மண்ணெண்ணெய் கேன் இரண்டு, சுசுகி இஞ்சின் ஒன்று இருந்ெது குறிப்பிடத்தக்கது மேலும் படகு இலங்கையின் மன்னார் மாவட்ட பகுதியில் இருந்து வந்து இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் கடந்த சில தினங்களாக இலங்கைக்குள் போதைப்பொருட்கள், உரம் கடத்தி செல்வதும் இலங்கையில் இருந்து தங்ககட்டிகள் தமிழகத்திற்கு கடல்வழியாக கொண்டு வருவதும் தொடர் நிகழ்வாக உள்ள நிலையில் தற்போது சேரன் கோட்டை பகுதியில் படகு நிறுத்தி வைத்திருப்பதால் கடத்தலில் ஈடுபட்டவர் இப்பகுதிக்கு வந்துள்ளனவா அல்லது அதன் காரணமாக படகை நிறுத்தி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செய்தி: முருகன், இராமநாதபுரம்


You must be logged in to post a comment.