இராமநாதபுரம், ஆக.11 – போதையில்லா தமிழ்நாடு என்ற இலக்கை நோக்கி போதைப்பொருள் பயன்பாடு ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, கீழக்கரை, முதுகுளத்தூர் உள்பட 45 இடங்களில் பள்ளிகளில் மாணவர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். என்எஸ்எஸ் திட்ட அலுவலர் ஜெயக்காந்தன் தலைமையில் ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் போதை பொருள் பயன்பாடு ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.


You must be logged in to post a comment.