கீழக்கரையில் விபத்துக்கு வழி வகுக்கும் அனுமதியல்லாத வேகத்தடைகள்..

கீழக்கரையில் சமீப காலமாக பல இடங்களில் வேகத்தடை எனும் பெயரில் உயருக்கே ஆபத்தை விளைவிக்கும் நடு சாலைகளில் குன்று அளவில் வேகத்தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  இத்தடைகள் எல்லாம் அரசாங்கத்தால் ஏற்படுத்த பட்டதா என்பது கேள்வி குறியாகவே உள்ளது.

ஏற்கனவே  கீழக்கரை நகராட்சி பகுதிகள் முழுதும் பேவர் பிளாக் கற்களாலும், தார்களாலும் ரோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வேகத்தடை எனும் பேரில் ஆங்காங்கு பல்வேறு இடங்களில் தன்னிச்சையாக அவரவர்களாகவே வேகத்தடைகளை அமைத்துள்ளனர் என்பது வேதனையான விசயம்.

இதுகுறித்து 500 பிளாட் பகுதியை சேர்ந்த திமுக கிளை செயலாளர் மரஹபா சித்தீக் அவர்கள் கூறுகையில் “கீழக்கரையிலுள்ள பல பள்ளி, கல்லூரிகளுக்கும் மாணாக்கர்களை அழைத்து செல்கிறேன்.  நகருக்குள் வேகத்தடை என்பது அத்தியாவசியம் என்ற நிலை மாறி அநாவசியமாக எல்லா இடங்களிலும், அதுவும்  குறிப்பாக மேலத்தெரு பகுதியில் 30க்கும் மேற்பட்ட வேகத்தடைகள்  அரசு அனுமதியில்லாமல் அமைத்துள்ளதாகவே தெரிகிறது. இந்த வேகத்தடைகளால்  5 நாட்களுக்கு முன் தேவையில்லா இடமான மாதிஹீர்ரசூல் சாலையில் திடீரென அரசு அனுமதியின்றி மிகப் பெரிய உயரத்தில் அமைத்துள்ளனர். இவ்வாறான காரியங்களால் புதிதாக முளைத்த வேகத்தடை இருப்பது அறியாமலும், சரியான அடையாளங்களும் இல்லாததாலும், அதிக உயரத்தாலும் தினமும் இருவராவது கீழே விழுந்து மருத்துவமனை செல்கின்றனர். நேற்றய முன்தினம் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் வேகத்தடை இருப்பது தெரியாமல் அருகிலே வந்து பார்த்ததும் பிரேக் பிடித்து நிற்காமல் நடந்து சென்ற பெண் மீது மோதியதில் பெண்ணுக்கு கை ஒடிந்து, மோதிய நபருக்கும் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

ஆகவே, நகருக்குள் அரசு அனுமதியின்றி இருக்கும் எல்லா வேகத்தடைகளையும் அப்புறப்படுத்தி தேவையுள்ள இடங்களில் மட்டும் அரசு விதிகளின் படி வேகத்தடை அமைக்க பொதுமக்களின் சார்பாக வேண்டுகிறேன்” என கூறி முடித்தார்.

தகவல்:- மக்கள் டீம் :

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..

2 thoughts on “கீழக்கரையில் விபத்துக்கு வழி வகுக்கும் அனுமதியல்லாத வேகத்தடைகள்..

  1. ஜூமா பள்ளி அருகில் கீழை மரச்செக்கு சாலை சந்திப்பிலும் யூசுஃப் சுலைகா மருத்துவமனை அருகிலும் அனுமதி பெறாமல் சாலைகளில் கட்டட கழிவுகளை கொட்டிவருகின்றனர். இரண்டும் புதிதாக போடப்பட்டா சாலைகள்தான் இதையும் கீழை நியூஸ் செய்தியாக வெளியிடுமா?

Comments are closed.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!