umeed இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் எவ்வளவு.?

மத்திய அரசின் umeed இணையதளத்தில் வக்ஃபு சொத்துகளை பதிவு செய்ய கொடுக்கப்பட்ட காலக்கெடு 6/12/2025 ம் தேதியோடு முடிந்துவிட்டது.

இந்தியா முழுவதும் உள்ள மொத்த வக்ஃபு சொத்துகளில் பாதி சொத்துகள் கூட மேற்படி இணையதளத்தில்
பதிவு செய்யப்படவில்லை.

இந்தியாவில் மொத்தம் 8.8 இலட்சம் வக்ஃபு சொத்துகள் இருக்கிறது இதில் உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் 2.4 இலட்சம் வக்ஃபு சொத்துகள் இருக்கிறது
இதற்கு அடுத்ததாக மேற்கு வங்காள மாநிலத்தில் 80.480 வக்ஃபு சொத்துகள் உள்ளன. பஞ்சாப் 75.511 வக்ஃபு சொத்துகளோடு மூன்றாவது இடத்திலும்
நான்காவது இடத்தில் தமிழ் நாடு உள்ளது. தமிழ்நாட்டில் 66,092 வக்ஃபு சொத்துகள் உள்ளன.

இந்த 8.8 இலட்சம் வக்ஃபு சொத்துகள்
மொத்தம் ஏக்கர் அளவில் கணக்கிட்டால்
சுமார் 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கும். மத்திய அரசின் UMEED இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யப்பட்ட சொத்துகளின் அளவு

கர்நாடக – 52917 வக்ஃபு சொத்துகள்!ஜம்மு மற்றும் காஷ்மீர் -25046 சொத்துகள்!பஞ்சாப் -24969 சொத்துகள்!
குஜராத்- 24133 சொத்துகள்!
உத்திரபிரதேசம்- 86345!
மஹாராஷ்டிரா -62939 சொத்துகள்!
கேரளா-42772 சொத்துகள்!
மேற்கு வங்காளம் – 716 சொத்துகள்!
அஸ்ஸாம் -681 சொத்துகள்!
மணிப்பூர் -393 சொத்துகள்!
மேகாலயா -13 சொத்துகள்!

இதில் தமிழ் நாடு எவ்வளவு சொத்துகளை பதிவு செய்து இருக்கிறது என்று இணையதளத்தில் சரியான தகவல்கள் இல்லை.

இதுவரை உமீது தளத்தில் 5,17,040 வக்ஃப் சொத்துக்கள் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும். 2,16,905 சொத்துக்கள், அதிகாரிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும். 2,13,941 சொத்துக்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும். சரிபார்ப்பின் போது 10,869 சொத்துக்கள் நிராகரிக்கப்பட்டு
இருப்பதாகவும் இணைய தள தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் நாடு வக்ஃபு சொத்துகளை பற்றிய முழுமையான தகவல்கள் இணையதளத்தில் இல்லை.

தமிழ் நாடு வக்ஃபு வாரியம் மேற்படி தகவல்கள்களை வெளியிட வேண்டும்.
எத்தனை சொத்துகள் இதுவரை பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன எத்தனை சொத்துகள் இன்னும் பதிவு செய்யப்பட வில்லை என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். தமிழ் நாடு  வக்ஃபு அன்ட்  பர்ஷனல்  லா கவுன்சில் மேற்படி தமிழகத்தில் உள்ள வக்ஃபு சொத்துகளை உமீது இணையதளத்தில் பதிவு செய்வதன் சாதக பாதகங்கள்
பற்றி ஆய்வு செய்ய அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளை கொண்ட கலந்தாய்வு கருத்தரங்க கூட்டத்தை வரும் 27/12/2025
அன்று மேட்டுப்பாளையம் நகரில்
நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு வக்ஃபு சொத்துகளும் பாதுகாக்கப்பட வேண்டும் ஒவ்வொரு வக்ஃபு நிர்வாகமும் திறமையான வக்ஃபு நிர்வாகியாக மாற வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். வக்ஃபு சொத்துகளை பாதுகாக்க ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் சொத்துகள் மீட்க உமீது இணையதளத்தை நாம் எவ்வாறு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதை சிந்திப்போம்.

முதலில் அணைத்து வக்ஃபு சொத்துக்களையும் உமீது தளத்தில் பதிவு செய்வோம்.  பிறகு ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி இருக்கும் சொத்துகளை இனம் காண்போம். பிறகு
அதை மீட்க கூட்டு முயற்சி மேற்கொள்வோம்.

 

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!