வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு நடைமுறைகள் முடிந்த பிறகு தான் உள்ளாட்சித்தேர்தல்! தமிழக அரசு, சென்னை ஐகோர்ட்டில் உத்திரவாதம்..
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளன. இந்த நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக்கோரி, | முனியன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்வழக்குதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர்,பழங்குடி யினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவுசெய்த பிறகே – உள்ளாட்சித் தேர்தல் அறி விப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் 5 எஸ். எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு 5 வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் – தலைமை வழக்கறிஞர் 5 ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய சு வழக்கறிஞர் ஆகியோர், வார்டுமறுவரையறைமற்றும் ÷ மதிப்பீட்டு பணிகள்,பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் – மற்றும் மகளிருக்கான இட 5 ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்படமாட்டாது.
எனஉத்தரவாதம் அளித்தனர். இதைபதிவுசெய்துகொண்ட நீதிபதிகள், வழக்கைமுடித்து வைத்து உத்தரவிட்டனர்.
ஊரக உள்ளாட்சி அமைப்பில் உள்ள 91 ஆயிரத்து 975 பதவி யிடங்களுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களின் பதவி காலம் அடுத்த மாதம் முடிவடைகிறது. அந்த பதவிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிக்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2011ம் ஆண்டு தான் நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிணைந்துமுழுமையாக தேர்தல் நடத்தப்பட்டது. இதன் பதவி காலம் 2016ம் ஆண்டுமுடிந்தது. அதன்பின் தேர்தல்நடத்தப்படவில்லை. தனி அலுவலர்கள் மூலம் உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டன.
2019ம் ஆண்டு காஞ் சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, நெல்லை,தென்காசி ஆகிய மாவட்டங்களை தவிர்த்து
27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிதேர்தல்டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ந்தேதி என2கட்டங்களாகநடந்தது. இந்த தேர்தல் மூலம் 515 மாவட்ட ஊராட்சிவார்டு உறுப்பினர்கள், 5,090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்,9,624கிராம ஊராட்சி தலைவர்கள், 76,746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் எனமொத்தம்91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு தேர்தல் நடந்தன.
இந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்கள், 2020ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பொறுப்பேற்றனர்.இவர்களது பதவிக்காலம் அடுத்தமாதம் (ஜனவரி) 5ந்தேதியுடன் முடிவடைகிறது.”
பதவிகாலம்முடிவடையும் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றால், மாநில தேர்தல் ஆணையத்தால் 45 நாட்களுக்குமுன்புதேர்தல் அறிவிப்புவெளியிடப்பட்டு இருக்கவேண்டும்.அதற்கான வாக்காளர்பட்டியலும் வெளியிட்டுஇருக்கவேண்டும். ஆனால் அதுபோன்ற அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.அதற்குபோதிய காலமும்இப்போது இல்லை. எனவே ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குஉடனடியாக தேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை.
எனவே பதவி காலம் முடியும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகளை நியமனம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுவாக தனி அதிகாரிகளை நியமனம் செய்வதற்கு,சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும். ஆனால்தமிழகசட்டசபை 6ந்தேதி தொடங்குகிறது.
எனவே அதற்கு முன் தினமான 5ந் தேதி, பதவி முடிவடையும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் செய்ய வேண்டும்.
தனி அதிகாரிகளை நியமிப்பதற்கு அவசரகூட்டம் 4 ந் தேதி அல்லது 5 ந் தேதி கொண்டுவரப்படும்.பின்னர் சட்டசபைகூட்டத்தில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்.
You must be logged in to post a comment.