யூடிஆர் (பட்டா,கூட்டு பட்டா) , கிராமநத்தம் , புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்யும் முறை…!

UDR பட்டாவில் தவறான நபர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது, பட்டாதாரர் & தந்தை பெயர் பிழையாக இருக்கிறது, எழுத்து & பெயர் பிழையாக இருக்கிறது, சர்வே எண்கள் / உட்பிரிவுகள் தவறுதலாக உள்ளது, கிராம நத்த ஆவணங்களில் நாங்கள் அனுபவிக்கும் வீட்டை பக்கத்து வீட்டுகாரர் பெயரில் ஏற்றிவிட்டனர் போன்ற பல ஆவண பிழைகளால் ஏற்படும் சிக்கல்கள் பல பிழையான ஆவணங்கள் வைத்து இருந்தால் நிலங்களை பட்டா மாற்றம் செய்தல் இலகு அல்ல, வீடுகட்ட அங்கீகாரம் கிடைப்பது கடினம், கடன் கிடைக்கபெறுவது கடினம், போன்ற பல சிக்கல்கள் எழும். இதனை வட்டாசிரியர் அலுவலகம் அணுகி சரி செய்தல் முறை.

UDR / கிராம நத்தம்/ FMB யில் திருத்தங்கள் செய்ய என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதின் நடைமுறை விளக்கம்.

முதலில் உங்கள் ஆவணத்தில் உள்ள பிழை என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும், இதில் உங்களுக்கு தெளிவில்லை என்றால் அறிந்தவர்களிடம் விவரங்கள் கேட்டு அறிந்து கொள்ளுதல் அவசியம். என்ன தவறு, தவறுதலுக்கான காரணம் இவற்றை அறிந்து கொண்டால், இதனை சரி செய்தல் இலகுவாகும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக எழுதுதல் வேண்டும். மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம்.

மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால் மூலமாகவும் அனுப்பலாம். நேரிடையாக சென்று கொடுத்தால் அத்தாட்சி பெறுதல் விதிகளின்படி அரசு அலுவலகத்தில் இருந்து ஏற்பு ரசீது (அக்னாலெட்ஜ்மெண்ட்) பெற வேண்டும். உங்கள் மனுவில் பணியாளர் & நிர்வாக சீர்திருத்தம் சட்ட ஆணை 114 , 66, 89 கீழ் ஏற்பு ரசீது கொடுக்கும் படி கேட்டுக்கொள்ள வேண்டும்.

நமது கோரிக்கை என்னவோ அதனை அரசு தரப்பு ஊழியர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம், மனுவாக எழுதுதல் வேண்டும்.

மனு சுருக்கமாகவும், தெளிவாகவும் இருத்தல் நலம். மேற்படி மனுவுடன் ஆதாரங்கள் இணைக்க வேண்டும். இதனை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்க வேண்டும். பதிவு தபால் மூலமாகவும் அனுப்பலாம்.

பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், பதிவு தபால் அத்தாச்சி வந்தவுடன், DRO அலுவலகம் நேரிடையாக சென்று தபால் பிரிவில் இருப்பவரிடம் மனுவின் நிலைமை, மற்றும் அதற்கு வரிசை எண் கொடுக்கப்பட்டு, உரிய நபரிடம் நகர்ந்து இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். தேவைபட்டால் DRO வை நேரிடையாக சந்திக்க வேண்டும்.

DRO அலுவலகத்தில் இருந்து, மேற்படி மனு, உங்கள் ஊர் வட்டாசியருக்கு FORWARD செய்யப்படும். பதிவு தபாலில் அனுப்பியிருப்பின், அதற்கான இன்னொரு நகல் கடிதம் நமக்கு வந்து சேரும் , அந்த கடிதம் கிடைத்தவுடன் தாங்கள் வட்டாட்சியர் அலுவலகம் நேரிடையாக சென்று அங்கு இருக்கும் தபால் பிரிவை அணுகி உங்கள் மனு ”எண்” ஆகிவிட்டதா என்றும், அது சம்பந்தப்பட்ட நபருக்கு சென்று விட்டதா என பார்த்துவிட்டு, தேவைபட்டால் துணை வட்டாட்சியர் , வட்டாட்சியரை சந்தித்து விவரங்களை சொல்ல வேண்டும்.

மேற்படி மனு வருவாய் ஆய்வாளருக்கு (RI) FORWARD செய்யப்படும். நாம் அவரை பின் தொடர்ந்து அதனை VAO க்கு வர வைக்க வேண்டும் . VAO வை நேரடியாக சந்தித்து கிராம கணக்கு விவரங்கள் , மற்ற கள விவரங்கள் பற்றி மனுவை ஒட்டி VAO விசாரணை நடத்தி ஆய்வறிக்கை தயார் செய்வர் . அப்பொழுது அவருக்கு தேவையான விவரங்களை நாம் தர வேண்டும்.

இதன்பின் இந்த மனுவானது, VAO விடம் இருந்து, RIக்கும், RI இடம் இருந்து வட்டாசிரியருக்கு அனுப்பப்படும். கூட்டுப்பட்டா சிக்கல்கள் பட்டா மேல் முறையீடு அதிகரியிடமும், FMB சிக்கல்கள் தலைமை சர்வேயருக்கும் , கிராம நத்தம் பிரச்சனைகள் நத்தம் அலுவலகத்திற்கு செல்லும். பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தங்களுக்கு விசாரணை அழைப்பானை வரும்.

அழைப்பாணையில் குறிப்பிட்ட தேதியில் தவறாமல் ஆஜராகி விசாரணையில் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளித்து, தாங்கள் கொடுத்த பதில்களை ஆவணங்களாக உருவாக்கி உங்களிடம் கையெழுத்து பெற்று மேற்படி ரிப்போர்ட்களை DRO விற்கு அனுப்பி வைப்பார்கள்.

எந்த வித சிக்கலும் பிரச்சினைகளும் ஆட்சேபனைகளும் உங்கள் பிராதுக்களில் இல்லை என்றால் DRO உத்தரவு போட்டு உங்களுக்கு ஏற்ற நிவாரணம் செய்வார் . உங்கள் ஆவணங்கள் DRO உத்தரவு படி சரி செய்யப்படும். அதுவே ஆட்சேபனைகளும் சிக்கல்களும் எதிர்ப்புகளும் இருந்தால், மேற்படி மனு வருவாய் கோட்டாட்சியர் நீதிமன்ற விசாரணையில் வழக்காக்கி பதியப்பட்டு , வழக்கு விசாரணை அடிப்படையில் தங்களுக்கு தீர்வு கிடைக்கும்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!