மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து ஊராட்சிக்குட்பட்ட மெய்யணம்பட்டியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி தலைமையில் மாநாடு போன்று நடைபெற்றது.,இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு டிராக்டர், மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனங்கள், மருத்துவ பணியாளர்கள், உசிலம்பட்டி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராம மக்கள் என சுமார் 11 ஆயிரம் பேருக்கு 36 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.,விழாவில் பேசிய அமைச்சர் பி.மூர்த்தி., துணை முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாநாடு போல ஏற்பாடு செய்துள்ள ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி க்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும்,கடந்த தேனி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வித்திட்ட தொகுதி உசிலம்பட்டி, முதல்படியாக உசிலம்பட்டி இருக்கும் என சொன்னார்கள் அதை நிரூபித்து காட்டினார்கள்.,அதே போல வரும் சட்டமன்ற தேர்தல் மதுரை மாவட்டத்தின் 10 தொகுதியிலும் திமுக வெற்றி பெறுவது உறுதி அதில் உசிலம்பட்டி தொகுதி முதன்மையாக இருக்கும்., முதல்வர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும்.,இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை மாநாடை போல நடத்தியது இன்றைக்கு மட்டுமல்ல என்றுமே திமுகவை உசிலம்பட்டியில் வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கையை காட்டியுள்ளது.,நாடாளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்றினீர்கள் என்பதை நான் அறிந்தேன், நாடாளுமன்ற தேர்தலில் எப்படி ஒன்றாக இணைந்து பணியாற்றி வெற்றி பெற வைத்தீர்களோ அதே போல வரும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வைக்க வேண்டும் எனவும்.,சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மதுரை முதலிடம் பெறும் அதில் உசிலம்பட்டி முதலிடம் பெறும் என பேசினார்.,வடக்கு ஒன்றியம் செயலாளர் அஜித் பாண்டி நகர செயலாளர் எஸ் ஒ ஆர் தங்கப்பாண்டியன் சோழவந்தான் எம் எல் ஏ வெங்கடேஷ் முன்னாள் எம் எல் ஏ முத்துராமலிங்கம் தொகுதி பொறுப்பாளர் செல்லத்துரை பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார் ஒன்றிய செயலாளர் எஸ் வி எஸ் முருகன் எம் பி பழனி செல்லம்பட்டி சுதாகரன் சேடப்பட்டி ஜெயச்சந்திரன் வழக்கறிஞர் பாலாஜி கொடி சந்திரசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.