தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா திமுக சார்பில் தமிழமெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.உசிலம்பட்டி அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவமணையில் பிரசவ வார்டில் உள்ள 39 குழந்தைகளுக்கும், குழந்தைகள் கிட் உபகரணம் வழங்கப்பட்டது. உசிலம்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு குழந்தைக்கான உபகரணங்கள் திமுக இளைஞர் அணி சார்பில் வழங்கப்பட்டது. இதில் திமுக உசிலம்பட்டி நகர இளைஞரணி சுஜேந்திரன், தினேஷ், ஜெயராமன், சரத்குமார், அருண்குமார் தேவன், தமிழரசன் மற்றும் நகர தகவல் தொழில்நுட்ப அணி அலெக்ஸ், பிரவீன், கேசவன் கலந்து கொண்டனர் இதில்; திமுக பிரமுகர்கள் பலர் கலந்து கலந்து கொண்டனர்.
உசிலை மோகன்
You must be logged in to post a comment.