ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே என் மனம்கொண்டான், தாமரைக்குளம் போன்ற கிராமங்களில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்பங்களை எடுத்து கூறும் வகையில் தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் அமர்லால் தலைமை ஏற்று துவங்கி வைத்தார், தெருக்கூத்து கலை நிகழ்ச்சி வாயிலாக வேளாண் துறையில் செயல்பட்டு வரும் அரசு நலத்திட்டங்கள் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள், உழவன் செயலி பயன்கள், நெற்பயிருக்கு பின் இரண்டாம் போக சாகுபடியாக பயிறு வகைகள். பற்றி விவசாயிகளுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் கலை நிகழ்ச்சி வாயிலாக பயிரிட்டு பயன்பெறும் வகையில் எடுத்துக் கூறப்பட்டது. இதில் உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் கலைவாணி, உதவி வேளாண் அலுவலர் சண்முகநாதன், முகமது யூசுப் ஆகியோர் கலந்து கொன்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி உதவி தொழில்நுட்ப மேலாளர் பவித்ரன் ஆகியோர் செய்திருந்தனர்.

You must be logged in to post a comment.