இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் திமுக தலைவர் கலைஞர் பிறந்தநாள் விழா மண்டபம் கிழக்கு திமுக ஒன்றிய கழக செயலாளர் ஆர்.கே. முத்துச்செல்லம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதிகள் கோவிந்தமூர்த்தி, இக்பால் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அதைத் தொடர்ந்து ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜன் வரவேற்றார். பின்னர் கூட்டத்தில் தலைமைக்கழக பேச்சாளர் பசும்பொன் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
அக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட திமுக செயலாளர் சு.ப.த.திவாகரன் பேசியதாவது, தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் வழங்கி முதலுதவி பெற்று உயிர் காக்கும் திட்டம் தந்தது கலைஞர் என்பதை யாரும் மறக்க முடியாது. காவல் துறை செயல்பாடு மிக மோசமாக உள்ளது. வழிப்பறி அதிகரித்துள்ளது. செல்லூர் ராஜு , திண்டுக்கல் சீனிவாசன் போன்ற அறிவு ஜீவிகளை அமைச்சர்களாக வைத்துக்கொண்டு எடப்பாடி தவறான வழியில் ஆட்சி நடத்துகிறார். குட்கா ஊழல் என்னவாயிற்று, உடைந்த பழைய பேருந்துகளை மாற்ற வக்கில்லை. மக்கள் போராட்டம் தான் இந்த ஆட்சியில் அதிகரித்துள்ளது. தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை போல மத்திய அரசுக்கு தலையாட்டிக்கொண்டு தரம் கெட்ட ஆட்சியை எடப்பாடி நடத்துகிறார்.திமுக சிறைக்கு அஞ்சாத சிங்கங்களை கொண்ட இயக்கம் . இந்திய பிரதமர் நம் நாட்டில் இருக்கிறாறா இல்லை அயல் நாட்டில் இருக்கிறாறா என்பதே தெரியவில்லை. காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க ஆட்சியில் பெட்ரோல் டீசல் வின்னை முட்டும் அளவில் உயர்த்தியுள்ளது. அதனால் விலைவாசி கோபுரம் போல் உயர்ந்துள்ளது. வர இருக்கும் தேர்தலில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சென்னை செயின் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் இக்கூட்டத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கனகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமது தம்பி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சம்பத்ராஜா, மருங்கப்பன், பால்ச்சாமி, மண்டபம் பேரூர் தகவல் தொழில்நுட்ப பிரிவு டி.வெள்ளைச்சாமி, இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தில்லை நிசாந்த், அரவிந்த், மற்றும் உச்சிப்புளி அருண்பேக்கரி அருண் , மண்டபம் ஒன்றிய சிறுபாண்மை பிரிவு துணை அமைப்பாளர் எம்.ஏ. ராஜா முஹம்மது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணை செயலாளர் ஆர்.டி.செல்வம் நன்றி கூறினார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print












