ஐக்கிய அரபு அமீரகத்தில் இனி மார்க்க பிரச்சாரங்கள் முறையான அரசு அனுமதியில்லாமல் ஈடுபட்டால் 3 மாத சிறை தண்டனை மற்றும் திர்ஹம்.5000/- வரை அபராதம் விதிக்கும் வகையில் புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்புதிய சட்டத்தின் படி இனி அமீரகத்தில் முறையான அனுமதி இல்லாத சங்கங்களோ, அமைப்புகளோ, அரசியல் கட்சிகளோ இனி பிரச்சாரங்கள் செய்யவோ, குர்ஆன் வகுப்புகள் நடத்தவோ முடியாது. அது போல் அனுமதியில்மாலாமல் மார்க்க புத்தகம் நிலையம் அமைப்பதும், பணம் வசூல் செய்வதும் தடை செய்யப்படுகிறது.
இந்தியாவில் உள்ள பல அரசியல் மற்றும் மார்க்க அமைப்புகள் அமீரகத்தில் தங்கும் இடங்களில் வாரந்திர நிகழ்ச்சிகள் நடத்துவது அன்றாட நிகழ்வாகும், இனி இதுபோன்ற செயல்பாடுகள் தடைப்படும்.
Source:- KhaleejTimes



You must be logged in to post a comment.